ஆர்வமூட்டல்:
ராகுல் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தளிக்க முழு வட்ட வடிவ பீட்சா வாங்கி வந்தான். தனக்கும் தன்னுடைய 3 நண்பர்களுக்குமாக நான்கு சமமான பகுதிகளாக பிரித்தான். ஒவவொருவருக்கும் நான்கில் ஒரு பங்கு பீட்சா கிடைத்தது.
விளக்குதல்:
வட்டத்தை அதன் செங்குத்து விட்டங்களின் வழியே பிரிக்கும் போது நான்கு சமமான பகுதிகள் கிடைக்கும். ஒவ்வொரு பகுதியும் கால்வட்டம் எனப்படும்.
கால் வட்டத்தின் மையக் கோணம் 90° ஆகும்.
கால் வட்டத்தின் பரப்பளவு A= 1/4*வட்டத்தின் பரப்பளவு
= πr^2/4ச.அ.
கால் வட்டத்தின் சுற்றளவு P = 1/4*வட்டத்தின் சுற்றளவு+2 r
=(π/2+2)rஅ
எ.கா:
21செ.மீ ஆரமுள்ள கால் வட்டத்தின் பரப்பளவு சுற்றளவு காண்க:-
தீர்வு:
கால் வட்டத்தின் பரப்பளவு A=πr^2/4
=((22/7)*21*21)/4
A=346.5ச.செ.மீ
கால்வட்டத்தின் சுற்றளவு P =(π/2+2)*r
=((22/7*2)+2)*21
P=75செ.மீ
தொகுத்துரைத்தல்:
கால்வட்டத்தின் வரையறை, மையக்கோணம், பரப்பளவு, சுற்றளவு ஆகியவற்றை தொகுத்துக் கூறல்.
No comments:
Post a Comment